ரெஸ்யூமில் இந்த தவறுகளைச் செய்தால் HR உங்கள் விண்ணப்பத்தை நிராகரிக்க வாய்ப்புள்ளது:
1. RESUME என்று தலைப்பு வைப்பது: உங்கள் பெயரைத் தலைப்பாக வையுங்கள்.
2. வேடிக்கையான ஈமெயில் ஐடிகள்: coolboy_vijay@gmail.com வேண்டாம்; vijay.r@gmail.com போல முறையான ஐடியைப் பயன்படுத்துங்கள்.
3. ஸ்பெல்லிங் மிஸ்டேக்: மீண்டும் மீண்டும் சரிபாருங்கள், எழுத்துப் பிழைகள் உங்கள் அலட்சியத்தைக் காட்டும்.
4. பொய் சொல்லுதல்: உங்களுக்குத் தெரியாத ஸ்கில்ஸை போடாதீர்கள்; பேட்டியில் மாட்டிக்கொள்வீர்கள்.
5. அதிகப்படியான பக்கங்கள்: பிரெஷர்களுக்கு 1 அல்லது அதிகபட்சம் 2 பக்கம் மட்டுமே போதுமானது.



