Home News தமிழகத்தின் தொழில் வளர்ச்சி விகிதம் 14 சதவீதமாக உயர்த்த இலக்கு: ஜெயலலிதா

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி விகிதம் 14 சதவீதமாக உயர்த்த இலக்கு: ஜெயலலிதா

0
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பவள விழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசியதாவது:-தமிழகத்தின் தொழில் வளர்ச்சி விகிதத்தை 14 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. தொழில் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதில் வங்கிகள் ஒத்துழைக்க வேண்டும். அதுமட்டுமின்றி நிதித்துறையில் தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டுவர வங்கிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இந்திய அளவில் வங்கிக் கணக்கு வைத்துள்ளோரின் பட்டியலில் தமிழகம் ஏழாவது இடம் வகிக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நிலையை உருவாக்க வேண்டும். இதற்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஒத்துழைப்பு தரும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

இவ்விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனர், வங்கியின் தலைமை அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

Exit mobile version