Home News பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை : சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்

பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை : சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்

0
stop child suicide, teddy bear crying, railway, stop teenager sucide, stop student suicide, stop youth suicide, stop child abuse, stop teen abuse, school stress, exam stress, academic stress, stop kids and teens neglect, stop physical abuse, stop emotional abuse, stop cyber bullying, stop bullying in schools, horror education system, ruthless education system, competitive education system, school pressure, home pressure, peer pressure, society pressure, pressure to be perfect, bad marks, bad grades, education can kill, toxic childhood, tragedy, deep sadness, heavy loss, save kids and teens, help kids and teens, protect kids and teens, give them a helping hand, talk with them, be nice to kids and teens, photo with love, you are not forgotten

*பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை : சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்*

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் மைதிலி. இவர் திருவாரூர் மாவட்டம் நீலகுடியில் செயல்படும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த பி.எஸ்.சி., பி.எட் பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக விடுதியில் தங்கி படிப்பை தொடர்ந்தார். இந்நிலையில், நேற்று இரவு உணவு சாப்பிட வராததை அடுத்து, மைதிலியை தேடி அவரது நண்பர்கள் அறையில் சென்று பார்த்தனர்.

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் ஜோடி தற்கொலை?

அப்போது மைதிலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அவர்கள் அடைந்தனர். இதையடுத்து பல்கலைக் கழகப் பொறுப்பாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நன்னிலம் போலீசார், மைதிலியின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக மைதிலியின் நண்பர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் நன்னிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓசூரில் உள்ள மைதிலியின் பெற்றோருக்கு காவல்துறையின் சார்பில் தகவல் கொடுக்கப்பட்டது. தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மைதிலியின் தந்தை தெரிவித்துள்ளார்.

கணவருடன் ஏற்பட்ட சொத்து தகராறு; தற்கொலை செய்துகொண்ட மனைவி!

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை,

ஆர்.ஏ. புரம், சென்னை – 600 028.

தொலைபேசி எண் – +91 44 2464 0050,

+91 44 2464 0060)

Exit mobile version