திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போதுதான் நீட் கொண்டுவரப்பட்டதாக சட்டப்பேரவையில் பேசிய எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்டதே திமுகதான் என்றும் பேசினார். நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என பாஜகவிடம் அதிமுக சொல்லத் தயாரா என கேள்வி எழுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.