வீட்டில் கொசு விரட்டி காயில்கள் மற்றும் லிக்விட்களில் உள்ள ரசாயனம் நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தினால் சுவாசக் கோளாறுகளை உண்டாக்கும். இயற்கையாகவே…
வீட்டில் கொசு விரட்டி காயில்கள் மற்றும் லிக்விட்களில் உள்ள ரசாயனம் நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தினால் சுவாசக் கோளாறுகளை உண்டாக்கும். இயற்கையாகவே கொசுக்களை விரட்ட:
1. கிராம்பு எலுமிச்சை ஒரு எலுமிச்சை பழத்தைப் பாதியாக வெட்டி, அதில் 10 கிராம்புகளைக் குத்தி அறையின் மூலையில் வையுங்கள். கொசுக்கள் அந்த வாசனைக்கு வராது.
2. வேப்ப எண்ணெய் விளக்கு வேப்ப எண்ணெய் தீபம் ஏற்றினால் கொசுக்கள் ஓடிவிடும்.
3. புதினா வாசனை பெப்பர்மின்ட் ஸ்ப்ரே பயன்படுத்துவதும் நல்ல பலன் தரும்.