சமையலறை ஈ, எறும்புகளை விரட்ட இதோ இயற்கை வைத்தியம்:
1. எலுமிச்சை + கிராம்பு: பாதியாக வெட்டிய எலுமிச்சையில் கிராம்பு குத்தி வைத்தால் ஈக்கள் வராது.
2. வினிகர் ஸ்ப்ரே: எறும்புகள் வரும் பாதையில் வினிகர் தெளித்தால் வாசனை தட அழிந்துவிடும்.
3. லவங்கப்பட்டை: எறும்புகள் வரும் இடத்தில் பட்டைத் தூளைத் தூவுங்கள்.
4. கற்பூரம்: சமையலறையைத் துடைக்கும் நீரில் கற்பூரத்தைக் கரைத்துத் துடையுங்கள்.