Home News ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு : சுற்றுலாப் பயணிகள் அருவிகளில்குளிக்க தடை

ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு : சுற்றுலாப் பயணிகள் அருவிகளில்குளிக்க தடை

0


தருமபுரி; தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. விடாது பெய்து வரும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 5,600 கன அடியாக வந்துகொண்டிருந்த தண்ணீரின் அளவு, படிப்படியாக அதிகரித்து 2 மணி நிலவரப்படி 21,000 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டு்ள்ளது.

Exit mobile version