Home Lifestyle Tips & Tricks குழந்தைகளுக்கு பொறுமையை (Patience) கற்றுக்கொடுப்பது எப்படி?

குழந்தைகளுக்கு பொறுமையை (Patience) கற்றுக்கொடுப்பது எப்படி?

0

இன்றைய ஸ்மார்ட்போன் உலகத்தில், ஒரு வீடியோவை தட்டினால் அடுத்த நொடியே ப்ளே ஆகிறது. உணவு கேட்டால் 10 நிமிடத்தில் ஸ்விக்கியில் வருகிறது. குழந்தைகள் தங்களுக்கு வேண்டியது “உடனே” கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு ‘பொறுமை’ (Patience) என்பதே இல்லாமல் போய்விடுகிறது.

எதிர்காலத்தில் அவர்கள் வாழ்க்கையை சந்திக்க, பொறுமை என்பது மிக முக்கியமான குணம். அதை எப்படி கற்றுக்கொடுப்பது?

1. “காத்திருப்பு” நேரத்தை பழக்குங்கள் (The Power of Waiting)

குழந்தை ஒரு பொருளை கேட்டால், உடனே அதை கையில் கொடுக்காதீர்கள். “அம்மா இப்ப கொஞ்சம் பிஸியா இருக்கேன், ஒரு 5 நிமிஷம் வெயிட் பண்ணு, நான் தர்றேன்” என்று சொல்லுங்கள். ஆரம்பத்தில் அழுவார்கள், ஆனால், கொஞ்ச நேரம் காத்திருந்தால்தான் பொருள் கிடைக்கும் என்பதை அவர்கள் மூளை மெதுவாகப் புரிந்துகொள்ளும்.

2. குறுக்கிடாமல் இருக்க ஒரு சிக்னல் (The Gentle Touch Rule)

நீங்கள் வேறு யாரிடமாவது பேசிக்கொண்டிருக்கும்போது, குழந்தைகள் வந்து உங்கள் சட்டையை இழுத்து “அம்மா, அம்மா” என்று தொந்தரவு செய்வார்கள். அப்போது, “நான் பேசும்போது குறிக்கிடாதே, வந்து என் கையை மட்டும் பிடித்துக்கொள். நான் பேசி முடித்ததும் உன்னிடம் பேசுவேன்” என்று பழக்குங்கள். இது மற்றவர்களுக்கு மதிப்பளிக்கவும், பொறுமையாகவும் இருக்க கற்றுக்கொடுக்கும்.

3. செடி வளர்க்கும் பயிற்சி (Gardening)

பொறுமையை கற்றுக்கொள்ள இயற்கையை விட சிறந்த ஆசான் இல்லை. குழந்தைக்கு ஒரு சிறிய தொட்டி மற்றும் விதைகளை கொடுத்து, தினமும் தண்ணீர் ஊற்றச் சொல்லுங்கள். ஒரு செடி வளர்ந்து பூ பூக்க பல நாட்கள் ஆகும் என்பதை அவர்கள் கண்கூடாகப் பார்க்கும்போது, காத்திருப்பதின் அருமை அவர்களுக்குப் புரியும்.

4. டைமர் (Visual Timer) பயன்படுத்துங்கள்

குழந்தைகளுக்கு ‘பத்து நிமிடம்’ என்றால் எவ்வளவு நேரம் என்று தெரியாது. “பத்து நிமிஷம் இரு” என்று சொல்வதை விட, போனில் ஒரு டைமரை செட் செய்து, “இந்த அலாரம் அடிக்கும்போது நாம் பார்க்குக்குப் போகலாம்” என்று சொல்லுங்கள். அது அவர்களுக்குக் காத்திருப்பதை ஒரு விளையாட்டாக மாற்றும்.

Exit mobile version