“மாசம் முடிவில் கையில் காசே இருக்க மாட்டேங்குது, அப்புறம் எப்படி சேமிக்கிறது?” என்று புலம்பும் பலருக்கு, சேமிப்பு என்பது செலவு…
“மாசம் முடிவில் கையில் காசே இருக்க மாட்டேங்குது, அப்புறம் எப்படி சேமிக்கிறது?” என்று புலம்பும் பலருக்கு, சேமிப்பு என்பது செலவு போக மிஞ்சும் பணம் என்று தவறான நம்பிக்கை உள்ளது.
1. Pay Yourself First சம்பளம் வந்த அடுத்த நொடியே, ஒரு குறிப்பிட்ட தொகையை (10% அல்லது 20%) தனியாக ஒரு சேமிப்பு கணக்கிற்கு மாற்றிவிடுங்கள். செலவு போக மீதியைச் சேமிக்க நினைக்காமல், சேமித்த பிறகு மீதியைச் செலவு செய்யுங்கள்.
2. ஆட்டோமேஷன் (Automation) இன்றைய பேங்கிங் ஆப்களில் ‘Auto-sweep’ அல்லது ‘Fixed Deposit’ ஆட்டோமேஷன் வசதி உள்ளது. ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் பணம் தானாகவே சேமிப்புக் கணக்கிற்கு மாறிவிடும்.
3. சிறு சிறு சேமிப்பு (Small Wins) ஒரு நாளைக்கு 50 ரூபாய் வீதம் மாதம் 1,500 ரூபாய் சேமிக்க முடியும். ஆண்டு முடிவில் 18,000 ரூபாயாக உயரும்.
4. அத்தியாவசியம் vs ஆசை ஒரு பொருளை வாங்கும் முன், “இது எனக்கு நிஜமாவே தேவைதானா (Need) அல்லது வெறும் ஆசைக்காக வாங்குகிறேனா (Want)?” என்று ஒரு நிமிடம் யோசியுங்கள்.