Home Lifestyle Tips & Tricks கூகுள் போட்டோஸ் (Google Photos) ஸ்டோரேஜ் ஃபுல் ஆகிவிட்டதா? இதோ தீர்வு!

கூகுள் போட்டோஸ் (Google Photos) ஸ்டோரேஜ் ஃபுல் ஆகிவிட்டதா? இதோ தீர்வு!

0

“Account storage is almost full” – இந்த நோட்டிபிகேஷன் வராத மொபைல்களே இருக்க முடியாது. கூகுள் இலவசமாக வழங்கும் 15GB ஸ்டோரேஜ் மிக சீக்கிரமாகவே நிறைந்துவிடும். ஸ்டோரேஜ் ஃபுல் ஆகிவிட்டால், உங்களால் புதிய ஜிமெயில் (Gmail) கூட பெற முடியாது. இதற்காக மாதம் தவறாமல் பணம் கட்டி ஸ்டோரேஜ் வாங்க வேண்டியதில்லை.

உங்களிடம் உள்ள 15GB ஸ்டோரேஜை சரியாக நிர்வகிக்க இதோ சில எளிய வழிகள்:

1. தேவையற்ற வாட்ஸ்அப் போட்டோக்களை பேக்-அப் செய்வதை நிறுத்துங்கள்

கூகுள் போட்டோஸ் ஸ்டோரேஜ் வேகமாக நிரம்புவதற்கு முக்கியக் காரணம், வாட்ஸ்அப்பில் வரும் குட் மார்னிங் மெசேஜ்கள், மீம்ஸ்கள் மற்றும் வீடியோக்கள் தானாகவே பேக்-அப் (Back up) ஆவதுதான்.

  • Google Photos ஆப்பை ஓபன் செய்து, Settings > Backup > Back up device folders பகுதிக்குச் செல்லுங்கள்.
  • அங்கு WhatsApp Images மற்றும் WhatsApp Videos ஆகியவற்றை ‘ஆஃப்’ (Off) செய்து விடுங்கள்.

2. Storage Saver-க்கு மாற்றுங்கள் (Quality Change)

நீங்கள் எடுத்த போட்டோக்கள் அனைத்தும் ஒரிஜினல் குவாலிட்டியில் (Original quality) சேவ் ஆவதால் அதிக இடம் பிடிக்கிறது.

  • பிரவுசரில் (Browser) கூகுள் போட்டோஸ் ஓபன் செய்து Settings செல்லவும்.
  • அதில் “Recover Storage” அல்லது “Storage Saver” என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.
  • இது உங்கள் பழைய போட்டோக்களின் குவாலிட்டியை லேசாக மட்டும் குறைத்து (கண்ணுக்கு வித்தியாசம் தெரியாது), உங்கள் ஸ்டோரேஜில் பல GB-களை உடனடியாக மிச்சப்படுத்தும்.

3. மங்கலான மற்றும் பெரிய பைல்களை நீக்குங்கள் (Review and Delete)

Google Photos ஆப்பிற்குள் சென்று “Manage Storage” என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால், கூகுளே உங்களுக்கு “Large photos & videos” மற்றும் “Blurry photos” (மங்கலான படங்கள்) என்று தனித்தனியாகப் பிரித்துக் காட்டும். இதனுள் சென்று தேவையற்ற பெரிய வீடியோக்களையும், ஒரே மாதிரி எடுத்த பல படங்களையும் ஒரே க்ளிக்கில் டெலீட் செய்துவிடலாம்.

4. Trash / Bin-ஐ க்ளியர் செய்யுங்கள்

நீங்கள் டெலீட் செய்த படங்கள் உடனே அழிந்துவிடாது. அவை ‘Trash’ அல்லது ‘Bin’ போல்டரில் 60 நாட்கள் வரை இருந்து இடத்தையே அடைத்துக்கொண்டிருக்கும். அங்கு சென்று ‘Empty Bin’ கொடுத்தால் மட்டுமே உங்களுக்கு ஸ்டோரேஜ் ஃப்ரீ ஆகும்.

Exit mobile version