புதிய செருப்பு அல்லது ஷூ அணியும்போது, அது குதிகாலில் உரசிக் கடித்து புண்ணாகிவிடுவது (Shoe bite) மிகுந்த வலியைத் தரும். அந்த வலியால் நடக்கவே சிரமமாக இருக்கும்.
1. கற்றாழை ஜெல் (Aloe Vera)
கற்றாழை ஒரு சிறந்த கிருமிநாசினி மற்றும் குளிர்ச்சி தரும் பொருள். செருப்பு கடித்த இடத்தில் உள்ள எரிச்சலை உடனே தணிக்கும். புதிய கற்றாழை ஜெல்லை (Fresh Aloe vera gel) எடுத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர விடுங்கள்.
2. ஐஸ் கட்டி ஒத்தடம் (Ice Pack)
செருப்பு கடித்த இடத்தில் வீக்கம் அதிகமாக இருந்தால், ஒரு காட்டன் துணியில் இரண்டு ஐஸ் கட்டிகளை வைத்து புண் உள்ள இடத்தில் மெதுவாக ஒத்தடம் கொடுங்கள். இது அந்த இடத்தில் ரத்த ஓட்டத்தை சீராக்கி, வீக்கத்தையும் வலியையும் சில நிமிடங்களில் குறைக்கும்.
3. தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரம்
சிறிதளவு தேங்காய் எண்ணெயை எடுத்துக்கொண்டு, அதில் ஒரு சிறிய துண்டு கற்பூரத்தைச் சேர்த்து நன்றாகக் கரைக்கவும். இந்த எண்ணெயைப் புண் உள்ள இடத்தில் தடவினால், வலியும் எரிச்சலும் குறைந்து புண் விரைவில் ஆறும்.
4. புண் ஆறாமல் தடுக்க ஒரு டிப்:
புண் ஆறாத வரை அந்த இடத்தில மீண்டும் செருப்பு படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கட்டாயம் வெளியே செல்ல வேண்டும் என்றால், செருப்பு கடிக்காமல் இருக்க அந்த இடத்தில் வேக்ஸ் (Wax) அல்லது தேங்காய் எண்ணெய் தடவிவிட்டு செருப்பு அணிந்தால் உராய்வு ஏற்படாது.