Home News ஆசிரியர்களின் வங்கி கணக்கு, பான்கார்டு எண்ணை பதிவு செய்ய வேண்டும் கல்வித்துறை உத்தரவு

ஆசிரியர்களின் வங்கி கணக்கு, பான்கார்டு எண்ணை பதிவு செய்ய வேண்டும் கல்வித்துறை உத்தரவு

0
pan card, india, income tax, pan, tax, business, it department, credit scores, pan card, pan card, pan card, pan card, pan card

பள்ளிக்கல்வி துறை கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் (இ.எம்.ஐ.எஸ்.) என்ற இணையதளத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

ஆசிரியர்களின் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும், பதிவு செய்யப்பட்டு, அதன்படியே இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. சமீபத்தில் ஆசிரியர்களின் சொத்து விவரங்களை அதில் தாக்கல் செய்ய கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து இருந்தது.

தற்போது அதன் தொடர்ச்சியாக ஆசிரியர்களின் வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு விவரங்களை பதிவு செய்ய பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், ஆசிரியர்களின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் வருமானம் ஆகியவை கல்வித்துறையின் கண்காணிப்பு வளையத்தில் வர உள்ளன.


Exit mobile version