Friday, July 3, 2026
HomeLifestyleTips & Tricksகுரூப் ஸ்டடி (Group Study) செய்யும் போது கவனச்சிதறலை தடுப்பது எப்படி?

குரூப் ஸ்டடி (Group Study) செய்யும் போது கவனச்சிதறலை தடுப்பது எப்படி?

எக்ஸாம் சமயத்தில் “மச்சான், இன்னைக்கு நைட் குரூப் ஸ்டடி பண்ணலாம்டா” என்று நண்பர்கள் ஒன்றுகூடுவது வழக்கம். ஆனால், ஆரம்பிக்கும்போது புத்தகத்தோடு ஆரம்பித்து, அரை மணி நேரத்திலேயே சினிமா கதை, அரசியல், யூடியூப் வீடியோக்கள் என திசைமாறி கடைசியில் டீ குடிக்கச் சென்றுவிடுவார்கள்.

குரூப் ஸ்டடியில் கவனச்சிதறல் இல்லாமல் படிக்க சில ரூல்ஸ் (Rules):

  • 1. ஆட்களின் எண்ணிக்கையை குறையுங்கள்

குரூப் ஸ்ததிக்கு 3 அல்லது அதிகபட்சம் 4 பேர்தான் சரியான அளவு. 5 பேருக்கு மேல் சேர்ந்தாலே அது ஒரு மீட்டிங் போல மாறிவிடும், அரட்டை அடிப்பது சுலபமாகிவிடும்.

  • 2. படிக்க வேண்டிய டார்கெட் (Set a Goal)

முன்கூட்டியே, “இன்று இரவு Chapter 4 மற்றும் 5-ஐ முழுமையாக படித்து முடிக்கப் போகிறோம்” என்று ஒரு இலக்கை (Target) நிர்ணயித்து விடுங்கள்.

  • 3. மொபைல் போன்களுக்கு தடையுத்தரவு

படிக்கத் தொடங்கும் முன் அனைவரின் மொபைலையும் சைலன்ட்டில் போட்டு, ஒரு பேக்கிற்குள் (Bag) வைத்து மூடிவிடுங்கள். பிரேக் (Break) விடும்போது மட்டும் போனை எடுங்கள்.

  • 4. கான்செப்ட்டை பிரித்துக் கொள்ளுங்கள் (Divide and Teach)

4 பேர் இருந்தால், ஆளுக்கு ஒரு கேள்வியையோ அல்லது ஒரு தலைப்பையோ (Topic) பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதை 20 நிமிடம் படித்துப் புரிந்து கொண்டு, மற்ற மூன்று பேருக்கும் ஒரு ஆசிரியரைப் போல எழுந்து நின்று சொல்லிக் கொடுங்கள். இது அனைவருக்கும் எளிதாகப் புரியும், எக்ஸாம் ஹாலிலும் மறக்கவே மறக்காது!

RELATED ARTICLES

Most Popular

Cinima World