பள்ளி விடுமுறை வந்துவிட்டாலே, முதல் இரண்டு நாட்கள் உற்சாகமாக இருக்கும். மூன்றாவது நாளில் இருந்து “அம்மா, எனக்கு ரொம்ப போர் அடிக்குது” என்று குழந்தைகள் நச்சரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். உடனே சமாளிக்க மொபைலையோ, டிவியையோ ஆன் செய்து கொடுப்பது சரியான தீர்வு அல்ல.
அவர்களை மொபைல் இல்லாமல் ஆக்கப்பூர்வமாக பிஸியாக வைக்க சில ஐடியாக்கள் இதோ:
- 1. வீட்டுக்குள் ட்ரெஷர் ஹன்ட் (Indoor Treasure Hunt)
அவர்களின் பிடித்த பொம்மையையோ அல்லது ஒரு சாக்லேட்டையோ வீட்டின் ஒரு மூலையில் ஒளித்து வையுங்கள். அதை கண்டுபிடிக்க சிறு சிறு குறிப்புகளை (Clues) ஒரு பேப்பரில் எழுதி ஆங்காங்கே வையுங்கள். ஒரு குறிப்பு அடுத்த குறிப்பிற்கு வழிகாட்ட வேண்டும்.
- 2. அட்டப்பெட்டி ஆர்ட் (Cardboard Crafts)
வீட்டிற்கு வரும் அட்டப்பெட்டிகளை குப்பையில் போடாதீர்கள். குழந்தைகளிடம் கொஞ்சம் கலர் பேப்பர், கத்திரிக்கோல், மற்றும் பசை (Glue) கொடுத்து, அந்த அட்டப்பெட்டியை ஒரு வீடாகவோ அல்லது காராகவோ மாற்றச் சொல்லுங்கள்.
- 3. லிட்டில் மாஸ்டர் செஃப் (Fireless Cooking)
சமையலறையில் சிறு சிறு வேலைகளை செய்ய அவர்களை அனுமதியுங்கள். அடுப்பு இல்லாமல் செய்யக்கூடிய வேலைகள், உதாரணமாக: சாண்ட்விச் (Sandwich) செய்வது, பழங்களை நறுக்கி ஃப்ரூட் சாலட் (Fruit salad) செய்வது, அல்லது எலுமிச்சை ஜூஸ் கலக்குவது போன்ற வேலைகளை அவர்களிடம் கொடுங்கள்.
- 4. பழைய பொருட்களை பிரிக்கச் சொல்லுங்கள்
அவர்களின் பழைய புத்தகங்கள், உடைந்த பொம்மைகள், மற்றும் பத்தாத துணிகளை அவர்களையே தரம் பிரிக்கச் சொல்லுங்கள் (Decluttering). நல்ல நிலையில் உள்ள பழைய பொம்மைகளை ஏழை குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்ற எண்ணத்தை இப்போதே விதைக்க இது ஒரு நல்ல வாய்ப்பு.



