Monday, July 6, 2026
HomeLifestyleநாட்டுக்கோழி குழம்பு — வேரூன்றிய சுவை

நாட்டுக்கோழி குழம்பு — வேரூன்றிய சுவை

நாட்டுக்கோழி குழம்பு — வேரூன்றிய சுவை

“நாட்டுக்கோழி என்றாலே கிராமத்து வீடுகள், மண் சட்டி, நெருப்பு அடுப்பு நினைவிற்கு வரும். நாட்டுக்கோழியின் சதை இறுகினதாக இருக்கும், ஆனால் அதிக நேரம் கொதிக்க விட்டால் ஒரு தனி சுவை வரும் — ஃப்ரோஜன் சிக்கன் தராத சுவை.”

தேவையான பொருட்கள்

  • ✨ 1 நாட்டுக்கோழி (கட்டி கட்டியாக வெட்டியது)
  • ✨ 3 வெங்காயம்
  • ✨ 4 தக்காளி
  • ✨ 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
  • ✨ வறுத்தரைத்த மசாலா: (கொத்தமல்லி விதை, சீரகம், மிளகு, மிளகாய், சோம்பு)
  • ✨ கறிவேப்பிலை, நல்லெண்ணெய்
  • ✨ உப்பு, மஞ்சள் தூள்

செய்முறை விளக்கம்

  1. படி 1 — வறுத்தரைத்த மசாலாவை தயாரித்து வையுங்கள் — இது தான் குழம்பின் ஆத்மா.
  2. படி 2 — நல்லெண்ணெயில் வெங்காயம், கறிவேப்பிலை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
  3. படி 3 — தக்காளி சேர்த்து குழைவாக வதக்கவும்.
  4. படி 4 — கோழியை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு, வறுத்தரைத்த மசாலா போட்டு நன்கு வதக்கவும்.
  5. படி 5 — தண்ணீர் ஊற்றி மூடி போட்டு 45–60 நிமிடம் கொதிக்க விடவும். நாட்டுக்கோழி நேரம் எடுக்கும்.
  6. படி 6 — எண்ணெய் மேல் மிதக்கும் வரை கொதித்தால் குழம்பு தயார்.

சமையல் குறிப்பு: நாட்டுக்கோழி குழம்பு எவ்வளவு நேரம் கொதித்தாலும் சரி — நேரம் போனகொண்டே சுவை கூடும்.

அன்போடு சமைத்தது ♥ — meozmedia.com

RELATED ARTICLES

Most Popular

Cinima World