Home Lifestyle Tips & Tricks குழந்தைகள் செய்யும் சிறிய தவறுகளை அன்பாக திருத்துவது எப்படி?

குழந்தைகள் செய்யும் சிறிய தவறுகளை அன்பாக திருத்துவது எப்படி?

0

குழந்தைகள் விளையாடும்போது ஒரு விலை உயர்ந்த பொருளை உடைத்துவிட்டாலோ, அல்லது தெரியாமல் பாலைக் கொட்டிவிட்டாலோ பெற்றோராகிய நமக்கு உடனே கோபம் தலைக்கேறும். சத்தம் போடுவோம், அல்லது அடிப்போம். ஆனால், இப்படி பயமுறுத்தி வளர்க்கப்படும் குழந்தைகள், எதிர்காலத்தில் பெரிய தப்பு செய்தால் கூட அதை நம்மிடம் சொல்ல பயந்து பொய் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

குழந்தைகளின் தவறுகளை, அவர்கள் மனதில் பயம் இல்லாமல் எப்படி திருத்துவது?

  • 1. அவர்களின் உயரத்திற்கு இறங்கிப் பேசுங்கள் (Eye-Level Communication)

குழந்தை ஒரு தப்பு செய்துவிட்டு பயந்து நிற்கும் போது, முழங்காலிட்டு அவர்கள் உயரத்திற்கு (Eye-level) உட்காருங்கள். அவர்கள் கையை பிடித்துக்கொண்டு கண்களைப் பார்த்து பேசுங்கள். இது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வைத் தரும்.

  • 2. “ஏன் செஞ்ச?” என்பதற்குப் பதிலாக “என்ன ஆச்சு?”

“ஏன் தள்ளி விட்ட?”, “ஏன் உடைச்ச?” என்று கோபமாக கேட்கும்போது குழந்தைகள் தற்காப்புக்காக (Defensive) பொய் சொல்லத் தொடங்குவார்கள். அதற்குப் பதிலாக, “இங்கே என்ன ஆச்சு? எப்படி கீழே விழுந்தது?” என்று கேட்டுப்பாருங்கள்.

  • 3. பிரச்சனைக்கு அல்ல, தீர்வுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்

தண்ணீரை தரையில் கொட்டிவிட்டால், “எப்பப் பாரு இதான் உன் வேலை” என்று திட்டாதீர்கள். “தண்ணீர் கொட்டிடுச்சா? பரவாயில்லை, வா ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு துணியை வெச்சு இதை எப்படி சுத்தம் செய்யலாம்னு பார்க்கலாம்” என்று சொல்லுங்கள்.

  • 4. உண்மையை சொல்லும்போது பாராட்டுங்கள்

ஒரு வேளை குழந்தை பயந்துகொண்டே, “அம்மா, நான் தெரியாம அந்த க்ளாஸ உடைச்சிட்டேன்” என்று உண்மையை சொன்னால், உடனே அடிக்கப் பாயாதீர்கள். “நீ உண்மையை சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்று அன்பாக சொல்லுங்கள்.

Exit mobile version