Home general-news தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

0

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நாளை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் வசிப்போர் கனமழை மற்றும் மின்னல் நேரங்களில் எச்சரிக்கையாக இருந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version