Friday, July 3, 2026
HomeLifestyleTips & Tricksகுழந்தைகளை தைரியமாக பேச வைக்கும் சிம்பிள் டிப்ஸ்

குழந்தைகளை தைரியமாக பேச வைக்கும் சிம்பிள் டிப்ஸ்

சில குழந்தைகள் வீட்டில் சுட்டித்தனமாக இருப்பார்கள், ஆனால் வெளியாட்களை பார்த்தாலோ அல்லது பள்ளியில் மேடையில் ஏறினாலோ பயந்து போய் அமைதியாகி விடுவார்கள். “என் பையன் ரொம்ப கூச்ச சுபாவம் (Shy)” என்று மற்றவர்கள் முன் சொல்வது அவர்களின் தன்னம்பிக்கையை மேலும் குறைத்துவிடும்.

குழந்தைகளின் பயத்தை போக்கி, அவர்களை தைரியமாகப் பேச வைக்க சில வழிகள்:

  • 1. அவர்களின் பேச்சை முழுமையாக கவனியுங்கள்

குழந்தைகள் எதையாவது ஆர்வமாக சொல்ல வரும்போது, “அப்புறம் சொல்லு, நான் பிஸியா இருக்கேன்” என்று சொல்லாதீர்கள். அவர்கள் சொல்வது சிறு கதையாக இருந்தாலும், அவர்கள் கண்களைப் பார்த்து முழுமையாகக் கேளுங்கள்.

  • 2. சிறு சிறு பொறுப்புகளை கொடுங்கள்

கடைக்குச் செல்லும்போது, பில்லுக்கு பணம் கொடுப்பதையோ அல்லது கடைகாரரிடம் “ஒரு பிஸ்கட் பாக்கெட் கொடுங்க” என்று கேட்பதையோ அவர்களை செய்யச் சொல்லுங்கள். முகம் தெரியாத மனிதர்களிடம் பேசும் கூச்சம் இதனாலேயே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும்.

  • 3. கண்ணாடியின் முன் பயிற்சி (Mirror Practice)

பள்ளியில் ஏதாவது ஒப்புவிக்க வேண்டும் (Recitation) என்றால், அவர்களை கண்ணாடியின் முன் நின்று சத்தமாகப் பேசச் சொல்லுங்கள். தங்களுடைய உடல் அசைவுகளையும் (Body language), முக பாவனைகளையும் அவர்களே பார்க்கும்போது அவர்களின் மேடை பயம் (Stage fear) தானாகவே அகலும்.

  • 4. மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள்

“பக்கத்து வீட்டு பையனைப் பார், எவ்வளவு தைரியமா பேசுறான், நீ இருக்கியே…” என்று ஒருபோதும் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்திறமை உண்டு. அவர்கள் ஒரு வார்த்தை தைரியமாக பேசினாலும், அதை மனதார பாராட்டுங்கள் (Appreciate).

RELATED ARTICLES

Most Popular

Cinima World