சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை இறுதி செய்ய சென்னை மெட்ரோ மற்றும் பெங்களூர் மெட்ரோ இரயில் நிறுவன அதிகாரிகள் இடையே ஓசூரில் ஆலோசனை நடைபெற்றது
கர்நாடகாவின் அத்திபள்ளி வழியாக பொம்மசந்திரா முதல் ஓசூர் வரை மொத்தம் தோராயமாக 23 கி.மீ நீளத்திற்கு மெட்ரோ ரயில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் 11கி.மீ. மற்றும் கர்நாடகாவில் 12 கி.மீ. நீளம் கொண்ட இந்த பாதை 12 மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் ஒரு பணிமனையுடன் அமைய உள்ளது
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஓசூர் மற்றும் பெங்களூரு இடையேயான போக்குவரத்து இணைப்பு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது