Sunday, July 5, 2026
HomeLifestyleவெளிவராத ரகசியம்

வெளிவராத ரகசியம்

வெளிவராத ரகசியம்

Silent Desires (மௌன ஆசை) — Tamil


உன்னோடு பேச வேண்டும் என்று
நினைக்கும் போதெல்லாம்,
வார்த்தைகள் தொண்டைக்குள்
மறைந்து கொள்கின்றன.
ஒரு புன்னகையோடு கடந்து போகும்
உன் ஒற்றை நொடிப் பார்வையில்,
என் ஆயுள் கால ஆசைகள்
அத்தனையும் அடங்கிக் கிடக்கிறது.
சொல்லிவிடத் துடிக்கும் உதடுகளை
மௌனம் கொண்டு பூட்டுகிறது
இந்த பயந்தாங்கோலி நெஞ்சம்.


Tags: Secret Love, Aasai Kavithai, Silent Longing, Unexpressed Love

RELATED ARTICLES

Most Popular

Cinima World