Saturday, July 4, 2026
HomeLifestyleTips & Tricksஉங்கள் வண்டியின் பேட்டரி (Car/Bike Battery) நீண்ட நாள் உழைக்க பராமரிப்பு குறிப்புகள்

உங்கள் வண்டியின் பேட்டரி (Car/Bike Battery) நீண்ட நாள் உழைக்க பராமரிப்பு குறிப்புகள்

வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை என்றால், முதல் சந்தேகப் படுவது பேட்டரியைத்தான். பேட்டரியை மாற்ற வேண்டுமென்றால் சில ஆயிரம் ரூபாய் செலவாகும். சரியான பராமரிப்பு இருந்தால், உங்கள் வண்டியின் பேட்டரியை 4-5 ஆண்டுகள் வரை துருப்பிடிக்காமல் சுலபமாகப் பயன்படுத்தலாம்.

1. டெர்மினல்களை சுத்தம் செய்யுங்கள் (Terminal Cleaning)

பேட்டரியின் மேல் உள்ள பிளஸ் (+) மற்றும் மைனஸ் (-) முனைகளில் வெள்ளை நிறத்தில் உப்பு போல படியும் (Corrosion). இது கரண்ட் பாய்ச்சலைத் தடுக்கும். இதை மாதம் ஒருமுறை சுடுநீரில் சோப்பு கலந்து அல்லது பழைய டூத்பிரஷ் கொண்டு துடைத்துச் சுத்தம் செய்துவிட்டு, சிறிது ‘பெட்ரோலியம் ஜெல்லி’ (Vaseline) தடவி வைத்தால் உப்பு படியாது.

2. நீண்ட நாள் வண்டியை ஓட்டாமல் வைக்காதீர்கள்

வண்டியை வாரக்கணக்கில் ஸ்டார்ட் செய்யாமல் நிறுத்தி வைத்தால், பேட்டரி தானாகவே டிஸ்சார்ஜ் (Discharge) ஆகிவிடும். வண்டியை ஓட்டவில்லை என்றாலும், வாரம் ஒருமுறை குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் இன்ஜினை ஆன் செய்து வைப்பது பேட்டரியின் ஆயுளை நீடிக்கும்.

3. தேவையற்ற எலக்ட்ரிக்கல் ஆக்சஸரீஸ்

வண்டி ஆஃப் ஆக இருக்கும்போது மியூசிக் சிஸ்டம், அதிக வெளிச்சம் தரும் கூடுதல் லைட்கள், அல்லது சார்ஜர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இது பேட்டரியை மிக வேகமாக பலவீனப்படுத்தும்.

4. நீரின் அளவை சரிபார்க்கவும் (Distilled Water)

உங்கள் வண்டியில் ‘Lead Acid’ பேட்டரி இருந்தால், அதன் மேல் உள்ள மூடியைத் திறந்து, அதில் உள்ள நீர் அளவு (Electrolyte level) குறிப்பிட்ட அளவு இருக்கிறதா என்று செக் செய்யுங்கள். அளவு குறைந்திருந்தால், ‘டிஸ்டில்டு வாட்டர்’ (Distilled Water) மட்டுமே நிரப்ப வேண்டும். குழாய் தண்ணீரை ஊற்றினால் பேட்டரி சில மாதங்களிலேயே பழுதாகிவிடும்!

RELATED ARTICLES

Most Popular

Cinima World