யூடியூபில் ஒரு முக்கியமான வீடியோவோ அல்லது சமையல் குறிப்போ பார்த்துக் கொண்டிருக்கும்போது, நடுவில் திடீரென வரும் 2 விளம்பரங்கள் (Ads) நம் பொறுமையை ரொம்பவே சோதிக்கும். சில விளம்பரங்களை ‘Skip’ கூட செய்ய முடியாது. எந்த தொந்தரவும் இல்லாமல், விளம்பரங்கள் ஏதுமின்றி யூடியூப் வீடியோக்களை நிம்மதியாகப் பார்க்க சில வழிகள் உள்ளன.
1. பிரேவ் பிரவுசர் (Brave Browser) பயன்படுத்துங்கள்
இது மொபைல் மற்றும் லேப்டாப் என இரண்டுக்குமான மிகச்சிறந்த ட்ரிக். நீங்கள் யூடியூப் ஆப்பிற்குள் சென்று வீடியோ பார்ப்பதற்குப் பதிலாக, Brave Browser என்ற பிரவுசரை டவுன்லோட் செய்து, அதனுள் யூடியூப் ஓபன் செய்து பாருங்கள்.
இந்த பிரவுசரில் டீஃபால்ட்டாகவே (Built-in) மிகச்சிறந்த Ad-blocker உள்ளது. இதில் நீங்கள் மணிக்கணக்கில் வீடியோ பார்த்தாலும் ஒரு விளம்பரம் கூட வராது. மேலும், ஸ்க்ரீனை ஆஃப் செய்துவிட்டும் (Background play) பாட்டு கேட்கலாம்!
2. லேப்டாப்பில் uBlock Origin (Chrome Extension)
நீங்கள் லேப்டாப்பில் கூகுள் குரோம் (Google Chrome) பயன்படுத்தி யூடியூப் பார்ப்பவராக இருந்தால், Chrome Web Store-க்கு சென்று “uBlock Origin” என்ற இலவச எக்ஸ்டென்ஷனை (Extension) உங்கள் பிரவுசரில் ஆட் (Add) செய்து கொள்ளுங்கள். இதை செய்துவிட்டால் யூடியூபில் மட்டுமல்ல, எந்த ஒரு வெப்சைட்டிலும் விளம்பரங்கள் உங்களை தொந்தரவு செய்யாது.
3. யூடியூப் பிரீமியம் ஃபேமிலி பேக் (YouTube Premium Family)
மூன்றாம் தரப்பு ஆப்களை (Third-party apps) நம்பாமல், அதிகாரப்பூர்வமாகவே விளம்பரங்கள் இல்லாமல் பார்க்க வேண்டுமென்றால் YouTube Premium தான் ஒரே வழி. ஆனால் ஒருவருக்கு மாதம் ரூ.129 கட்டுவது அதிகம் என நினைத்தால், உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் 5 பேரை சேர்த்துக்கொண்டு Family Plan (சுமார் ரூ.189) எடுங்கள். ஒரு நபருக்கு மாதம் வெறும் ரூ.30 முதல் ரூ.40 வரை மட்டுமே செலவாகும்.



