வீட்டில் உபயோகப்படுத்தாமல் தூக்கிப் போடப்பட்ட, ஆனால் கேமரா மட்டும் வேலை செய்யக்கூடிய பழைய ஸ்மார்ட்போன் இருக்கிறதா? அதை குப்பையில் போட வேண்டாம்! ஆயிரக்கணக்கில் செலவு செய்து சிசிடிவி (CCTV) கேமரா வாங்குவதற்குப் பதிலாக, உங்கள் பழைய மொபைலையே ஒரு முழுமையான கண்காணிப்பு கேமராவாக மாற்றலாம்.
- ஸ்டெப் 1: ஆப்பை இன்ஸ்டால் செய்யவும் (Alfred Camera App)
- உங்கள் பழைய மொபைல் மற்றும் தற்போது நீங்கள் பயன்படுத்தும் புது மொபைல் ஆகிய இரண்டிலும் “Alfred Home Security Camera” என்ற இலவச ஆப்பை (Play Store / App Store மூலம்) டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.
- ஸ்டெப் 2: லாக்-இன் (Login)
- இரண்டு போன்களிலும் ஒரே ஜிமெயில் ஐடி (Gmail ID) மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி லாக்-இன் செய்யுங்கள். இது மிகவும் முக்கியம்.
- ஸ்டெப் 3: கேமராவை செட் செய்யவும் (Camera Setup)
- பழைய மொபைலில் லாக்-இன் செய்ததும், அதில் உள்ள செட்டிங்ஸில் “Camera” என செலக்ட் செய்யுங்கள். இப்போது இந்த பழைய போன் சிசிடிவி கேமராவாக மாறிவிட்டது.
- இதை உங்கள் வீட்டு வாசலிலோ, ஜன்னலிலோ அல்லது அறையிலோ ஒரு ஸ்டாண்ட் (Tripod) மூலமாக செட் செய்துவிட்டு, சார்ஜரை கனெக்ட் செய்து ஆன் செய்து வையுங்கள்.
- ஸ்டெப் 4: மானிட்டர் செய்வது எப்படி? (Viewer Setup)
- இப்போது உங்கள் புதிய மொபைலை கையில் எடுங்கள். ஆப்பிற்குள் சென்றதும் அதை “Viewer” ஆக செலக்ட் செய்யுங்கள்.
- அவ்வளவுதான்! உங்கள் பழைய போனின் கேமரா என்ன பார்க்கிறதோ, அது அத்தனையும் உங்கள் புதிய போன் ஸ்க்ரீனில் லைவ் (Live) ஆக தெரியும்.
**இதன் சூப்பர் வசதிகள்:** இந்த ஆப் மூலம் உங்கள் புதிய போனில் இருந்துகொண்டே வீட்டின் லைட்டை (Flashlight) ஆன் செய்யலாம். யாராவது திருடன் வந்தால், இங்கிருந்தே சைரன் சத்தத்தை எழுப்பலாம். கேமராவில் அசைவுகள் (Motion Detection) தெரிந்தால் உடனே உங்கள் போனுக்கு நோட்டிபிகேஷன் வரும்!